பழைய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும்
இது தொடர்பான வலியுறுத்தலை ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்க்கட்சியின் பலர் முயற்சித்து வருகின்றனர்.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினரும் இந்தக்கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளனர்.
புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை புரிந்துக்கொள்ள வாக்காளர்களுக்கு காலம் போதாது என்ற அடிப்படையிலேயே பழைய முறைக்கான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சியும் பழைய முறையில் உள்ளுராட்சி தேர்தல் ஒன்றையே விரும்புவதாக அறிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலுக்கு முன்னர் கட்சியின் பல மாறுதல்களை ஏற்படுத்தவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகிவருவதாக அதன் செயலர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.