இலங்கையை காப்பாற்றும் முயற்சியில் நான்கு நாடுகள்
விவாதத்தின் போது, ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எந்த விதத்திலும் இணங்க முடியாது என மேற்படி நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளன.
குறிப்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைக்கு இந்த நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பில் 47 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.