கே.பியை காப்பாற்ற முயற்சிக்கும் சட்டமா அதிபருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்!
கே.பிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியவில்லை என சட்டமா அதிபர் கோரினால் அவர் நாட்டிற்கு ஒரு துரோகியாகிவிடுவார் என முன்னாள் இராணுவ அதிகாரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
கே.பி யார் என இந் நாட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு உட்பட தெரியும். நான் இராணுவ தளபதியாக செயற்பட்ட காலத்தில் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய கே.பி தான் விடுதலை புலிகள் அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் சேகரித்து கொடுத்ததோடு தீவிரவாதிகளுக்கு ஆயுதம் பெற்றுகொடுத்தார்.
அவர் பெரிய அளவில் அந் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன் மூலம் எங்கள் நாட்டில் முக்கியஸ்தர்களின் உயிர்கள் பரிக்கப்பட்டன.அதனை தொடர்ந்து பிரபாகரன் உயிரிழந்த பின்னர் விடுதலை புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுகொண்டதும் கே.பி என தெரியவந்தன.
கே.பி விடுதலை புலிகளின் சீருடை அணிந்து பிரபாகரனுடன் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்து இடங்களிலும் உள்ளன.
புலனாய்வு பிரிவின் அறிக்கைகமைய கே.பி என்பவர் ஆபத்தான பயங்கரவாதியாக சுட்டிக்காட்டப்ட்டுள்ளது.
அப்படி இருக்கும் போது இந் நாட்டு சட்டமா அதிபர் கே.பி தவறு செய்யவில்லை, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாதென கூறினால் இச்சட்டமா அதிபர் நாட்டு மக்களுக்காகவோ, நியாயத்திற்காகவே முன் நிற்பவர் அல்ல.
அவர் தீவிரவாதிகளுக்காக செயற்படுகின்றவர் என எனக்கு தோன்றுகின்றது. இதற்கு முன்னாள் அரசாங்கத்தின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கே.பியை கொஞ்சினார்கள் ஏன் என்றால் கே.பியிடமிருந்த பணத்தின் மீதும் கப்பல்கள் மீதும் கொண்டிருந்த பேராசையே அதற்கு காரணம்.
அவ் அவசியத்திற்கமையவே தான் இந்த சட்டமா அதிபரும் கே.பியை பாதுகாப்பதற்கு முயற்சிக்கின்றார். கே.பி நிரபராதி, கே.பி நாட்டிற்கு ஆபத்தான் காரியங்களை மேற்கொள்ளவில்லை என் சட்டமா அதிபர் கூறினால் அவர் இந் நாட்டின் துரோகியாக கருதப்படுவார்.
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தினருக்கு துரோகியாகிவிடுவார். அவரது தொழிலின் பொறுப்பினை பாதுகாக்கவில்லை.இவ்வாறான சட்டமா அதிபர் நாட்டு மக்களுக்கு அல்லது நாட்டு சட்டத்திற்கு பாதுகாப்பானவர் என எதிர்பார்க்க முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.