Breaking News

தேர்தல் முடியும்வரை நான் ஊமை-வடக்கு முதல்வர்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிட விரும்பவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலா ளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.பிரம்மகுமாரிகள் சபையில் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் சில கேள்வி எழுப்ப முற்பட்ட போது,

நான் தேர்தல் முடிவடையும் வரை எதனையும் பேசவிரும்பவில்லை. அத்துடன் நான் தெரிவித்ததாக இணையத்தளங்களில் வெளியான காணொளி தொடர்பில் நிச்சயமாக பின்னர் பதில் கொடுப்பேன் எனவும் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.