Breaking News

விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளருடனான செவ்வி (காணொளி)

தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு வலுச்சேர்க்கும்
கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 09-08-2015 மாலை 4.00மணிக்கு ஒஸ்ரேலியாவின் மெல்பேண் நகரில் சன்சைன் எனுமிடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் யாழ்மாவட்ட வேட்பாளர் செல்வி சின்னமணி கோகுலவாணி வன்னிமாவட்ட வேட்பாளர் திரு இராமகிஸ்ணன் பிரபாகரன் மட்டக்களப்பு மாவட்டவேட்பாளர் மருத்துவர் பன்னீர்ச்செல்வம் மற்றும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சிறீஞானேஸ்வரன் அத்தோடு திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மைச் செயற்பாட்டாளரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளருமான ரூபன் அவர்களும் ஸ்கைப் வழியாகக் கலந்துகொண்டு சன்சைனில் வதியும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுடன் சமகால அரசியல்நிலவரம் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தனர். 

இக்கலந்துரையாடலுக்கு இருபதிற்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் மக்களுக்கு பணத்தை அள்ளியிறைத்து கூட்டமைப்பிற்கு வாக்குச் சேகரிப்பதாக வன்னி மாவட்ட வேட்பாளர் பிரபாகரன்அவர்கள் தெரிவித்ததோடு அவற்றை நிரூபிக்கவும் தான் தயார் என்றும் கூறினார். 

திருமலைவேட்பாளர் ஞானேஸ்வரன் கருத்துக்கூறுகையில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் திருமலை மாவட்ட உறுப்பினராகவிருந்த பெயர்குறிப்பிடவி ரும்பாத ஒருவரை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெரும்தொகையான நிதியைக் கொடுத்து விலைபேசி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி அவரை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்திவருவதாகத் தெரிவித்து இத்தைகைய கீழ்த்தரமான அரசியல்செய்யும்நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ரூபன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான பயங்கரவாத முத்திரையை அகற்றும் நோக்கிலேயே கூட்டமைப்புடன் இணைந்து அரசியல்பாதைக்குள் பிரவேசிக்கமுயன்றதாகவும் ஆனால் எந்த அமைப்பினால் கட்டிவளர்க்கப்பட்டதோ அல்லது யாருடைய ஒத்துழைப்பால் திரு. சம்பந்தன் அவர்கள் 2001 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படும் நிலைவந்ததோ அதனை மறந்து தம்மை உதாசீனப்படுத்திய விதத்தையும் நினைவுகூர்ந்தார். 

மேலும் தன்மீதான அவதூறான குற்றசாட்டுக்களுக்கும் சான்றுகளுடன் தனது விளக்கத்தை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் முழுமனதோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனயின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டதோடு தேர்தலுக்கு பின்னரும் துடிப்புடன் செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.