Breaking News

இணைய தாக்குதலை ஆரம்பித்த சின்னக் கதிர்காமர் (ஆதாரம்)

சுமந்திரனுக்கெதிராக களத்திலும் முகநூலிலும்
கருத்துக்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில் அதனை தடுக்கும் முகமாக சுமந்திரன் தனது கொழும்பு விசுவாசிகள் சிலரின் முயற்சியுடன் தனது முகநூல் தாக்குதல் வேலைகளை ஆரம்பித்திருக்கின்றார்.

தனது முகநூலில் பதிவிடும் பதிவுகளுக்கு அரைவாசிக்கு மேற்பட்டவர்களின் கருத்துக்கள்(Comment) சுமந்திரனுக்கு எதிரானதாகவும் த.தே.கூட்டமைப்பின் சோரம்போகும் தன்மையை எடுத்துக்காட்டியும் இருந்தது ஆதரவாளர்கள் சோர்வடைந்திருப்பதால் சுமந்திரனுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதனை தடுப்பதற்காக கேள்வி கேட்கும் பெரும்பாலான யாழ் ஊடகவியலாளர்களின் முகநூல்கள் உட்பட நூற்றக்கு மேற்பட்டவர்களின் பெயர்களை தனது கருத்துக்கு பதிவிடமுடியாமல் செய்திருந்தார் இருந்தும் புதிய நபர்கள் தொடர்ந்து இணைந்து வருவதால் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

சுமந்திரனுக்கு மிக நெருக்கடியை கொடுத்துவரும் த.தே.மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் அவர்களின் பெயரில் பல முகநூல் பக்கங்களை ஆரம்பித்து அதிலிருந்து சுமந்திரனுக்கு ஆதரவாகவும் மணிவண்ணனுக்கு எதிரான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றார்.

இரு தினங்களுக்கு முன்னர் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக யாழ் வீர சிங்கம் மண்டபத்திற்கு அழைத்திருந்த சுமந்திரன் எந்த ஊடகவியலாளர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கேள்வி பதிலுக்கு அனுமதிக்காத சிலரின் பதிவுகள்

இதற்கு பக்கபலமாக சிறிலங்கா அரசின் அடிவருடிகள் பலரின் பக்கபலமும் இருப்பதாக அறியவருகின்றது.


இதனூடாக தனது முகநூலிற்கு வருபவர்களின் கணிப்பு ஓரளவாவது தனக்கு சார்பாக இருக்கும் என்ற ராஜதந்திர திட்டம் சுமந்திரனிடம் இருப்பதாக சாணக்கியன் சயந்தன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சரின் காணாளி ஒன்றினை வெளியிட்டிருந்தோம் ஆனால் அதனைக்கூட புனையப்பட்ட காணொளி என சுமந்திரன் நேற்று கண்டுபிடித்திருந்தார் என்பதனையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். இதுபோல சனல் நான்கு காணொளியும் உண்மைக்கு மாறாக புனையப்பட்டிருப்பதாக அண்மையில் ஊடகமானாட்டில் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

































முன்னைய செய்திகள்

சனல் 4 செய்திகள் பொய்-மகிந்தவின் பாணியில் சுமந்திரன்(காணொளி)

வடமராட்சியில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (புகைப்படங்கள்)