மஹிந்தவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது – ரவூப் ஹக்கீம்
பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இறுதியாக வர்த்தக சம்மேளனம் மேற்கொண்ட கணிப்பீட்டின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.நேற்று உடுநுவர – பொல்வத்தக் கிராமத்தில் அலுவலகமொன்றைத் திறந்து வைத்தபோதே இந்த கருத்தை ஹக்கீம் வெளியிட்டார்.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்ததை கடுமையான எதிர்த்த அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன போன்றோரும் ஐக்கிய தேசிய முன்னணிக் கூட்டில் இணைந்திருப்பது மிகவும் சாதகமானது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தம்மிடம் ஒப்படைத்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், ஒரு பலமான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியொன்று அமையப்போவதாக தெரிவித்தார்.