Breaking News

"குதிரை ஓடிய பின்னர் லயத்தை பூட்­டி­யது போன்றதே மைத்திரியின் அறிவிப்பு''

“குதிரை ஓடிய பின்னர் லயத்தை பூட்­டி­யது” போன்று மஹிந்த தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இறுதி நேரத்தில் அறி­விப்பு விடுத்­துள்ளார். இது காலம் தாம­தித்த முடிவு என ஜே.வி.பி.யின் பொதுச்செய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

காலம் தாழ்த்­தி­யா­வது ஜனா­தி­பதி சரி­யான முடிவை எடுத்­துள்ளார். இதனை வர­வேற்­கின்றோம் என்றும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக ரில்வின் சில்வா மேலும் தெரி­விக்­கையில் மஹிந்த ராஜபக் ஷ விற்கும் திருடர் கூட்­டத்­திற்கும் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­மனு வழங்­காமல் ஜனா­தி­பதி தவிர்த்­தி­ருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக இந்த முடிவை தைரி­யத்­துடன் அன்று மேற்­கொண்­டி­ருந்தால் மஹிந்­தவும் அவ­ரது ஆத­ரவு அணியும் இந்­த­ள­விற்கு வளர்ச்சி கண்­டி­ருக்காது. அந்த இடத்தில் ஜனா­தி­பதி விட்ட தவ­றுதான் மஹிந்­த­வுக்கு பிர­சா­ரத்தை தேடிக் கொடுத்தது.

அத்­தோடு 100 நாட்­களின் பின்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்தல் நடத்­தி­யி­ருந்­தாலும் இன்­றைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டு தோல்­வி­ய­டைந்த மஹிந்த செல்லாக் காசா­கவே இருந்தார். அப்­போதே கடும் தீர்­மா­னங்­களை கட்சி மட்­டத்தில் ஜனா­தி­பதி எடுத்­தி­ருக்க வேண்டும்.

இன்று “குதிரை ஓடிய பின்னர் லயத்தை பூட்­டி­யது” போன்று ஜனா­தி­பதி செயற்­பட்­டுள்ளார். காலம் கடந்தாவது ஜனாதிபதிக்கு ஞானம் பிறந்துள்ளதை வரவேற்கின்றோம் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.