மைத்திரியின் கூற்று ஆபத்தானது என்கிறார் எஸ்.பி.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கூற்று தமக்கு பாரதூரமான பாதகத்தை ஏற்படுத்தும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், கட்சியை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது எனவும், கட்சி பிளவடைவதனை இரண்டு தலைவர்களும் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கை பிரிவின் பொறுப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுக்கு அமைய மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் வேட்பு மனு தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர் எனவும் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.