அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!
தேர்தல் காலத்தில் அரசாங்க சொத்துக்கள் முறையற்ற விதமாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபோகேனினால் வெளியிடப் பட்டு ள்ளது.
நேற்றைய தினம் (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கம் உரிய அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்களுக்கு மாத்திரம் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றை வழங்குவதுடன் மற்ற அனைத்து அதிகாரிகளும் தமக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களை உரிய அமைச்சுக்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறில்லாமல் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்த முயற்சிப்போருக்கு எதிராக அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.