தோல்விக்கு நான் தான் காரணமா ? பதவி விலகவும் தயார் : தோனி
தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், அணித்தலைவர் பதவியில் இருந்து விலக தயார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று பங்களாதேஷ் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணிதலைவர் தோனி, செய்தியாளர் சந்திப்பின் போதுபின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார். ''இந்திய கிரிக்கெட் தொடர்பாக நடக்கும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் நான் தான் காரணாம் என்று என் மீது தான் குற்றம் சுமத்தப்படுகிறது. எல்லாம் என்னால் நடைபெறவுள்ள என்பது போல, இதை கேட்டு பங்களாதேஷ் ஊடகங்கள் கூட சிரிக்கின்றன. ஊடகங்கள் என்னை மிகவும் நேசிக்கின்றன.
எவ்வளவு காலம் நீங்கள் கேப்டனாக இருப்பீர்கள் என்ற கேள்வி எப்போதும் என்னிடம் கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது. என்னை நீக்குவது நியாயம் என்று நினைத்தால், அதன் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தால், என்னை தலைமைப் பதவியில் இருந்து விலகிவிட்டு ஒரு விளையாட்டு வீரராக மட்டும் தொடர தயாராக உள்ளேன். என்னை பொருத்த வரையில், தலைவர் யார் என்பது ஒரு விடயமே இல்லை.
நான் எப்போதுமே தலைவர் ஆக வேண்டும் என வரிசையில் நின்றது கிடையாது. தலைவராக இருப்பது என்பது ஒரு வேலை, மற்றோரு பொறுப்பு அவ்வளவுதான். தலைமைப் பதவியில் இருந்து என்னை நீக்க விரும்பினால் அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை" என்றார். தோனியின் இந்த அதிரடி அறிவிப்பு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.