காணாமல் போனோர் தொடர்பான இறுதி அறிக்கை ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்படும்
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதமளவில் சமர்ப்பிக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாம் குறித்த இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் வௌியிட முடியும் என நம்புகிறோம் என்று, இது பற்றி கருத்து தெரிவித்த, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணரத்ன குறிப்பிட்டார். இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கு அறிவுரை வழங்க நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்கள் குழு தற்போது அறிக்கை தயாரிப்புக்கு உதவி வருகின்றது.
குறித்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.