Breaking News

நீண்­ட­கா­ல­மாக சிறை­யி­லுள்ள தமிழ் இளை­ஞர்கள் விடு­தலை செய்­யப்­ப­டாமை வேத­னைக்­கு­ரி­யது!

இரா­ணு­வத்­த­ள­பதி சரத்பொன் சேகா­விற்கே பொது மன்னிப்பு வழங்­கிய அர­சாங்கம் சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக சிறையில் வாடும் தமிழ் இளை­ஞர்­களை இது­வரை விடு­விக்க முயற்சி எடுக்­க­வில்லை. இது­ வே­த­னைக்­கு­ரிய விட­ய­மாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்­றக்­ கு­ழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரு­மான மு.சந்­தி­ர­குமார் தெரி­வித்­துள்ளார்.

விவே­கா­னந்த நகர் மக்­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த யுத்த காலத்தில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு பல ஆண்­டு­க­ளாக சிறையில் வாடிக்­கொண்­டி­ருக்கும் தமிழ் இளை­ஞர்­களை விடு­த­லை­செய்­வ­தற்கு இன்­று­வரை எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கென விசேட குழு ஒன்றை நிய­மித்து அந்த குழுவின் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் இரண்டு வார காலத்­திற்குள் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மென பாரா­ளு­மன்றில் நீதி­ய­மைச்சர் குறிப்­பிட்­டார். அவர் அவ்­வாறு குறிப்­பிட்டு இரண்டு மாதங்­க­ள் ­க­டந்த நிலை­யிலும் இன்­று­வரை எந்த நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

பல்­வேறு குற்­றச்­சாட்­டின்­பேரில் சிறையில் அடைக்­கப்­பட்ட சரத்­பொன்­சேகாவினைக்­கூட விடு­தலை செய்து அவ­ருக்கு பதவி உயர்­வு­களும் வழங்­கப்­பட்­டுள்­ள ­நி­லையில் சாதா­ர­ண­மாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் இது­வரை விடு­த­லை­ செய்­யப்­ப­ட­வில்லை; அது­மட்­டு­மன்றி சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள இவ் இளை­ஞர்­களில் பலர் நீதி மன்றில் முற்­ப­டுத்­தப்­ப­டாத நிலை அல்­லது நீண்ட காலத்­திற்கு ஒரு­த­டவை மட்­டுமே அவர்­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் நிலையே தொடர்­கின்­றது. இவ்­வாறு சிறை­யில்­வாடும் இளை­ஞர்­களின் குடும்­பங்கள் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு பணம் செலுத்­தியே இன்றும் வறு­மைக்­கோட்­டுக்குள் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் தேர்தல் காலத்தில் இவர்­களின் விடு­தலை விரைவில் உறு­திப்­ப­டுத்­தப்­படும் என குறிப்­பிட்டு தமி­ழர்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொ­டுத்­த­வர்­கள்­கூட இவ்­வி­ட­யத்தில் அதிக அக்­கறை காட்­ட­வில்லை மாறாக அதற்­கான நட­வ­டிக்­கைகள் விரைவில் மேற்­கொள்­ளப்­படும் என்றே கூறி­வ­ரு­கின்­றனர்.

மீள் குடி­யேற்­றத்தின் பின் சுமார் ஐந்து தேர்­தல்­களை தமிழ் மக்கள் எதிர்­கொண்­டுள்ள போதும் அவை அனைத்­திலும் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். தேர்­தல்­கா­லத்தில் வழங்­கப்­படும் வாக்­கு­று­தி­களை நம்பி வாக்­க­ளிக்கும் மக்கள் தேர்­தலின் பின்­னரே தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கின்றனர். அவர்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதிநிதிகளைக்கூட மக்களால் பின்னர் காணமுடிவதில்லை. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு யாரிடம் கேட்பது என்ற நிர்க்கதியில் மக்கள் உள்ளனர். எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் மிகச்சரியான தீர்மானங்களை எடுக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளனர் என்றார்.