Breaking News

20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தை குழப்ப மகிந்த முயற்சி



20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்தை குழப்ப மகிந்த முயற்சி 20ம் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அரசாங்கத்துக்கு சிக்கல்களை ஏற்படுத்தவும் மகிந்தராஜபக்ஷ முயற்சிக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மகிந்தவின் தரப்பினரால் கொண்டு வரப்படும் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.