Breaking News

நிதி ஒழுங்கு விதிகள் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் மஹிந்த! ரவி குற்றஞ்சாட்டு

நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க ப்பட்டதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சதியொன்று இருந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தோல்வி அரசாங்கத்தின் பயணத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது போல இதற்காக அரசாங்கம் பதவி விலக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார்.

நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“குறித்த பிரேரணையின் தோல்வியின் பின்னணியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறிய சூழ்ச்சியொன்று இருந்துள்ளது. இந்த தோல்வியால் அரசாங்கத்தின் முன்நோக்கிய பயணத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. எவ்வாறாயினும் இந்த தோல்வி ஏழைகளின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எதிராக வாக்களித்தவர்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்” என அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.