Breaking News

19ஆவது திருத்தும் குறித்து ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் - அநுர

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க கோரியுள்ளார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைப்பதவியில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியவுடன் 19ஆவது திருத்தம் தொடர்பில் தேசத்துக்கு அறிவிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கோரியுள்ளார்.