Breaking News

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைகிறது - சம்பந்தன்

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல் நடைமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனும் பொதுவான கருத்து நிலவியது என அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்  தெரிவித்தார்.

மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிகள் நிர்ணயிக்கப்படும்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறையும் என அவர் தெரிவித்தார்.