டண்டனக்கா பாடல் டி.ராஜேந்தரை இழிவுபடுத்தும் பாடலா?
இப்பாடலை டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ் எழுதி உள்ளார்.
‘எங்க தல எங்க தல டி.ஆரு.
சென்டிமென்டுல தார்மாறு,
மைதிலி என்னை காதலின்னாரு, அவரு உண்மையா லவ் பண்ண சொன்னாரு.
மச்சான் அங்க தாண்ட தல நின்னாரு’ என அந்த பாடல் தொடங்குகிறது. இதை அனிரூத் பாடி உள்ளார். இந்த படத்தில் டி.ராஜேந்தரின், ரசிகர் வேடத்தில் ஜெயம்ரவி நடிக்கிறார். எனவேதான் இந்த பாடலை சேர்த்து உள்ளனர்.
இப்பாடல் மூலம் டி.ராஜேந்தரை ஜெயம் ரவி கேலி, கிண்டல் செய்துள்ளதாக டுவிட்டர், பேஸ்புக்கில் ரசிகர்கள் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘டண்டனக்கா’ பாடலை தவறாக பொருள் கொள்ளச் செய்யும்படி சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்கள் வெளியிட்டு உள்ளனர்.
ரசிகர்கள் இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.