வாக்குப் பெட்டிகள் மாற்றப்படாது - ஆணையாளர்
தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் முறையாக வகையில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாங்கள் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிப்போம். பெட்டி மாற்றப்படும் என்று இன்னும் யாரும் எண்ணிக்கொண்டிருப்பார்கள் என்றால் தயவு செய்து அதனை கைவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.