அனைத்து மக்களும் மைத்திரிக்கு வாக்களிக்கவும்- விநாயகமூர்த்தி
அனைத்து மக்களும் மைத்திரிக்கு வாக்களித்து மகிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
அரசியல் மாற்றத்தை எல்லா மக்களும் விரும்புகின்றார்கள்.இதனால் அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் மகிந்தவின் பத்து வருட ஆட்சியில் தமிழர்களுக்கான எந்த தீர்வும் எட்டப்பட வில்லை.
குறிப்பாக வலிவடக்கு மற்றும் சம்பூர் மக்களின் மீள் குடியமர்வு , தமிழர்களின் காணி அபகரிப்பு ,சிவில் நிர்வாகம் போன்ற தமிழர்களின் மூன்று பிரதான பிரச்சனைகளுக்கும் மகிந்தவின் ஆட்சியில் தீர்வு தரமுடியவில்லை. இத் தீர்வு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேட்டால் ஏதாவு ஒரு காரணத்தை சொல்லி பின்தள்ளி விடுவார்கள் .
இந்த தேர்தல் காலத்தில் தான் மகிந்த மற்றும் அவரது சகோதரர்கள் சொல்லுகின்றார்கள் தேர்தலுக்கு பின்னர் தீர்வு தரலாம் என்று இதை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும். மகிந்தவின் பத்து வருட ஆட்சியில் நடந்தது என்ன?
இந்த நேரத்தில்தான் தமிழ் மக்கள் மற்றும் ஏனைய மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது அதனால் அனைத்து மக்களும் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது எல்லோரதும் கடமை யாரும் அவர்களை வாக்களிப்பதை தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.