ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் சொத்துக்குவிப்பு வழக்கு நீடிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 4 பேரின் பிணையினை மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அவரது தோழிகள் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.
இதையடுத்து ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் பிணை கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால பிணை வழங்கி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்களுக்காக வழங்கப்பட்ட இடைக்கால பிணை இன்றுடன் முடிவடைந்தமையால் அதனை நீடிக்குமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உட்பட 4 பேருக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு, மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், வழக்கில் சிறப்பு அமர்வை அமைத்து தினமும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.