Breaking News

இ.தொழிலாளர் காங்கிரசும் உடைகிறது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை முறைப்படி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இ.தொ.காவில் இருந்து நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை ஐதேகவில் இணைந்து கொண்டதுடன், எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமது கட்சி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்குவதாக இதொகா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.