யாழில் மகிந்தவுக்கு இடமில்லை
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ,மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்ட படத்துடன் கூடிய பதாகையில் மகிந்த ராஜபக்சவின் படம் மட்டும் இனந்தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டனர்.
அதனை நினைவு கூறும் முகமாக யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் இருவரும் உள்ளடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் மட்டும் இனந்தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளது.