Breaking News

வரவு – செலவு திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டின் வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
 

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு அனைத்து துறைகளுக்கும் தேவையாக பாதீடுகள் செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.   கடந்த 17, 18, 19 ஆம் திகதிகளில் கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவையில் நடைபெற்ற வரவு – செலவு திட்டம் மீதாக விவாதங்களை அடுத்து நிறைவேற்றப்பட்டிருந்தது.  

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஆளுநருக்காக நிதி மற்றும் வெலிஓயா பகுதிகளுக்கான நிதி பரிசீலணைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.   இந்த நிலையில் நிறைவேற்றப்பட்ட வரவு – செலவு திட்டம் வடமகாண ஆளுநரின் அங்கிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.    

இது தொடர்பில் ஆராய்ந்த வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி வரவு – செலவுத்திட்டத்திற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.   வரவு – செலவு திட்டத்திற்கான அங்கீகாரத்தினை அடுத்து பணிகள் மும்முரப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.