யாழில் இளம்பெண் தற்கொலை அம்பலப்படுத்தும் குடும்பத்தினர்(காணொளி)
வலி. வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டிற்கு முன்னால் பெண்ணொருவர் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (16.04.23) முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு முன் வந்து, தனக்குத் தானே தீ மூட்டியுள்ளார்.
பின்னர் அயலவர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாகவும் இருந்தும் அவர் மீண்டும் கிணற்றினுள் குதித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த பெண் வலி. வடக்கு பிரதேச சபையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் என்பதுடன், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில் அவருக்கு 10 வயதில் பெண்பிள்ளை ஒன்று உள்ளது.
யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான பாலகிருஷ்ணர் விஜிதா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர்
குறித்த பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.
குற்றம்சாட்டும் குடும்பத்தினர்(நன்றி-சமூகம் இணையம்)
சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டு சுகிர்தனின் மனைவி இரு பிள்ளைகளுடன் பிரான்ஸ் சென்று தனித்து வாழ்ந்து வருகின்றார். உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து குறித்த பெண் பெற்றோலுடன் சுகிர்தன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை மகளிடம் காண்பித்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டதாக மகள் குறிப்பிட்டுள்ளார்.
சுகிர்தனின் வீட்டிற்குள் சென்று வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்த விஜிதாவை அயலவர்கள் காப்பாற்றியபோதும் மீண்டும் அவர் கிண்றுக்குள் குதித்ததாகவும் கூறப்படுகிறது.
உடல் முழுவதும் தீக்காயமடைந்த நிலையில் அவர் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டார் எனச்சொல்லப்பட்டபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல், தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும் என என சொல்லப்படுகிறது.
தனது இதில் தவிசாளரை காப்பாற்றுவதில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தீவிர பிரயத்தனம் எடுத்ததன் காரணமாகவே சுகிர்தன் விரைவாக வெளியில் வர முடிந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
முன்னரும் இவ்வாறு பாலியல் குற்றம்,கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள்மீது கட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காத நிலையே காணப்படுகிறது.
இது தொடர்பில் குற்றம்சாட்டும் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வியும் எழுப்பியிருந்தார், அவரது முகநூலிற்கும் சம்பந்தப்பட்ட அரசியல்தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க யாழில் எந்த மகளிர் அமைப்புக்களோ முதன்மை ஊடகங்களோ குரல்கொடுப்பதாக தெரியவில்லை. குறித்த கட்சியில் அண்மையில் மகளிர்தினம் பெருமெடுப்பில் கொண்டாடப்பட்டது என்பதை இங்கு நினைவூட்டுகின்றோம்.
அதே கட்சியில் உள்ள அம்பிகா சற்குணநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி, சசிகலா ரவிராஜ் ,மதனி நெல்சன் போன்றவர்கள் அமைதி காப்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
இவ்வாறு பெண்களை் மீதான வன்முறைகளும் பாலியல் தொல்லைகளும் காலத்திற்கு காலம் இடம்பெற்றபோதும் குற்றம்சாட்டப்படும் குறிப்பிட்ட நபர்கள் அரசியல் பின்னணிகளை கொண்டிருப்பதன் காரணமாக அந்தந்த காலப்பகுதிகளில் அவர்கள் தப்பிவிடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்