திலீபன் நினைவாலயத்தில் -மணிவண்ணன் அடாவடி!(படங்கள்)
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வருடாவருடம் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றுவருவதுண்டு. இந்த நிகழ்வு ஏற்பாட்டினையும் துப்பரவு பணிகளையும் வழமையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இளைஞர்களே செயற்படுத்தி வந்திருந்தனர்.
அந்த வகையில் த.தே.மக்கள் முன்னணியால் 2017ஆம் ஆண்டு நிரந்தரமாக சில காலத்திற்கு பயன்படுத்தகூடியவாறான இரும்பினாலான வளைவு அமைக்கப்பட்டிருந்தது. அதன் பனர் சீலை மாத்திரம் நிறம் மாறும் காரணத்தால் அவை வருடாவருடம் அதே ஏற்பாட்டாளர்களால் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இம்முறையும் புதிய பனர் பிறின்ற் செய்வதற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சிக்கோ அல்லது தொண்டர்களுக்கோ அதுதொடர்பில் அறிவிக்காது நேற்று அதிரடியாக நுளைந்த மணிவண்ணன் தரப்பு அதிலிருந்த பளைய வளைவை நீக்கி தாம் கொண்டுவந்த புதிய வளையை நிறுவி தமது அரசியல் போக்கிலித்தனத்தை காட்டியுள்ளனர்.
ஏற்கனவே தியாக தீபம் நினைவை முன்னிட்டு திலீபன் நினைவாலயத்தில் 02.09.2020 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்,கஜேந்திரன் உள்ளடங்கிய தொண்டர்கள் சிரமதானப்பணியை செய்திருந்த நிலையிலேயே மணிவண்ணனின் இந்த அரசியல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளமை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
02.09.2020 அன்று நினைவிடத்தை சுத்தம் செய்த முன்னணி
தம் உயிரையே தியாகம் செய்து மண்ணுக்காய் மரணித்த மானமாவீரர்களின் நினைவு நிகழ்வுகளை தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும் என்பதனை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
மேலும் கடந்த காலத்தில் ஒருநாள்க்கூட திலீபன் நினைவு நாள்,மாவீரர் நாள் சிரமதானத்தில் ஒருபுல்லினைக்கூட புடுங்காக மணிவண்ணன் இந்த வளைவினை நிறுவிய பின்னர் இரவு வேளையில் அவ்விடத்தில் ஏற்பாட்டுவேலைகளை தாமே செய்வதாக படம் காட்டுவதற்காக சொன்றுள்ளமையும் அவரது கீழ்த்தர அரசியலை எடுத்துக்காட்டியுள்ளது.
நேற்றிரவு நினைவிடத்திற்கு சென்று படம் காட்டியபோது