Breaking News

சீனாவில் புதிதாக பரவும் ப்ரூசெல்லா வைரஸ் - இதுவரை 3245பேர் பாதிப்பு!

கொரோனாவைத் தொடர்ந்து சீனாவில் ‘வேகமாக பரவி வரும் ப்ரூசெல்லா’ என்னும் வைரசால் இதுவரை 3 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

வடமேற்கு சீனாவின் Gansu மாகாண தலைநகரான Lanzhou வில் உள்ள உயிரியல் மருந்து நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் புருசெல்லா பாக்டீரியா கசிந்துள்ளது.  

இதனால், மால்டா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொடிய புருசெல்லா பாக்டீரியா கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 3 ஆயிரத்து 245 பேருக்கு புருசெல்லா பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக லாங்ஜோ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  



இந்த பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. 

இருந்தும், மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவது அரிதானது என்றும், பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலமும், விலங்குகளாலும் இந்நோய் பரவக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆண்மையிழக்கச் செய்யும் ப்ரூசெல்லா பாக்டீரியா தொற்று - சீன ஆய்வகத்திலிருந்து பரவியது எப்படி?