Breaking News

நேற்று நடந்தது இதுதான் -வடமராட்சி நிலவரம்(காணொளி)

பட்டிப்பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பருத்தித்துறை
கொட்டடி சித்திவிநாயகர் ஆலைய குளத்தினை திறந்து வைக்கும் நோக்குடன் அமைச்சர் சுத்துமாத்து சுமந்திரன் அவர்கள் பருத்தித்துறைக்கு நேற்று வருகை தந்திருந்தார்.


இலங்கை மன்னன் குளக்கோட்டன் கட்டிய குளத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய குளமாக அவரது அடிபொழிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்றபோதும் இக்குளத்தில் பிள்ளையார் வருடத்தில் ஒருதடவை குழிப்பதை தவிர ஒரு வாழைமரத்திற்கு கூட இந்த நீர் பயன்படப்போவதில்லை என்கின்றார் மாலைபோட்ட அரியகுமார் மாஸ்ரர். 

ரணிலை விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக கொண்டு வருவதற்காக இரவு பகலாக அயராது உழைத்த அமைச்சர் சுத்துமாத்து சுமந்திரனுக்கு பாராட்டு விழாவும் அவரது அடிபொழிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த நிகழ்வுகளுக்காக பருத்தித்துறை பகுதிக்கு அமைச்சர் வந்தபோது அவரை வரவேற்க திரண்ட பொதுமக்களின் நெரிசல் காரணமாக பருத்தித்துறை வீதி இரண்டு மணிநேரமாக ஸ்தம்பித்திருந்தது.

மேளதாள வரவேற்புடன் கொட்டடி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் அங்கு இடம்பெற்ற விசேட பூசையிலும் அவர் பங்கு கொண்டார். அதனைத் தொடர்ந்து தனது பெயர்பொறித்த பதாகையினை திறந்து வைக்கும் முகமாக வீதிக்கு அவர் வந்துபோது அமைச்சர் அவர்களைப் பார்க்கவும், பேசவும்,கைலாகு கொடுக்கவும் ,மாலைபோடவும் என பெரும் மக்கள் கூட்டமே திரண்டதனால் வீதியில் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி நோக்கி சென்ற பேரூந்துகள் வேறு வழித்தடங்களுடாக திருப்பிவிடப்பட்டன. அங்கு சென்ற அமைச்சர் தனது பெயர் பதாகையினை திறந்து வைத்துவிட்டு கூட்ட இடத்திற்கு செல்வதற்காக திரும்பியபோது மீண்டும் பெரும் சன நெரிசல் ஏற்பட்டது வியாபாரிகள் தமது வியாபாரத் தலங்கள் முன்பாக பூரண கும்பம் வைத்து வரவேற்பளித்ததுடன் நூற்றுக்கணக்கானோர் ஏற்டகனவே அடிபொழிகளால் வாங்கி கொடுக்கப்பட்ட மாலைகளோடு வரிசையாக காத்து நின்றனர். 

இதனிடையே அமைச்சரை வாழ்த்துவதற்காக தென்மராட்சியிலிருந்தும் வந்தவர்கள் சனநெரிசல் காரணமாக பல மணிநேரமாக காத்திருந்து பருத்தித்துறையினை வந்தடையமுடியாமல் மந்திகைப்பகுதியிலிருந்து திரும்பி சென்றுள்ளனர். அதுபோல வடமராட்சி கிழக்கிலிருந்து வந்தவர்கள் நெரிசல் காரணமாக ஆனைவிழுந்தான் சந்திக்கப்பால் செல்லமுடியாமல் ஆனைவிழுந்தான் சந்தியிலிருந்து திரும்பி சென்றுள்ளனர்.

   

ஏறக்குறைய கோவில் திருவிழா ஒன்றில் சாமி ஊர்வலம் வந்துவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு நிலைமை காணப்பட்டது. மக்களின் அன்பு வெள்ளத்தை சமாளித்த அமைச்சர் சுத்துமாத்து சுமந்திரன் அவர்கள் அடிபொழிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்குபற்றும் முகமாக கோவில் வளாகத்தை வந்தடைந்தார். அங்கு அமைச்சருக்கு கொடுப்பதற்காக அவரது எடுபிடிகளால் கொண்டுவரப்பட்ட வாழ்த்து மடல்களை கண்டு ஒருகணம் திகைத்துப்போன அமைச்சர் தான் நிதியுதவி கொடுத்த அமைப்புக்கள் எல்லாம் வாழ்த்துப்பா கொண்டுவந்துள்ளார்களா என நோட்டம் விட்ட அமைச்சருக்கு சிறிது நேரத்தின் பின்னரே அவை ஒருவரே ஒரே இடத்தில் அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டமையை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னரே அவை புலிகளால் தண்டனை கொடுக்கப்பட்ட தனது கைப்பிள்ளையே ஏற்பாடு செய்திருந்ததை அறிந்து மிகவும் மனம் வேதனையடைந்தார். இதிலிருந்து ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்தி சிறப்புரையாற்ற ஆரம்பித்தார் அமைச்சர், அவர் தனது உரையில் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு நல்லாட்சி படகிற்கு யாரும் கல்லெறிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதோடு மீறினால் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.

பின்னர் ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகளின் தலைப்பை தாறுமாறாக வாசித்து ஆதரவாளர்களுக்கு மண்டை கழுவிக்கொண்டிருந்தபோது அருகிலுள்ள பாடசாலைகளின் கல்வி நேரம் முடிவடைந்த நிலையில் அமைச்சர் அவர்கள் வருகை தந்துள்ளார் என்பதை அறிந்த மாணவ மாணவிகள், கூட்டம் நடைபெறுவதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கில் கூட்ட இடத்தை நோக்கி திரளத்தொடங்கினார்கள். உடனடியாக சொக்கலேட்டுக்களுக்கு ஏற்பாடு செய்து தருவித்த அமைச்சர் அவற்றை மாணவ மாணவிகளுக்கு தானே வழங்கத்தொடங்கினார்.

அமைச்சரின் அருகில் இருந்தவர்களும் அவருக்கு உதவியாக சொக்கலேட்டுகளை வழங்க முற்பட்டபோது அமைச்சர் அங்கிளிடம்தான் வாங்குவோம் என அடம்பிடித்து அவரின் கையாலேயே சொக்கலேட்டுக்களை வாங்கிச்சென்றதை பலரும் வியப்புடன் பார்த்தவண்ணமிருந்தனர். ஒருவாறு மாணவர்களை அன்புடன் வழியனுப்பி வைக்க மாலையானது பின்னர் அமைச்சர் சுத்துமாத்து சுமந்திரன்அவர்கள் தனது விசேட அதிரடிப்படையினரின் போதுகாப்போடு விடைபெற்றுச் சென்றகையோடு அவரது அடிபொழிகள் அன்றைய தினம் பிரதி செய்து வைத்திருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை முகநூலில் பதிவேற்றி தவது தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றமை அண்மையில் வெளியான விஸ்வாசம் திரைக்கதையை விஞ்சி நிற்பதாகவே பார்க்கப்படுகின்றது.


தொடர்புடைய செய்திகள்

சவால் விட்ட சுமந்திரனுக்கு எதிர் சவால் விடுத்தது சக்தி(காணொளி)




ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி


சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)

விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)

கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி

மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?

என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்

முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)






முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்