ஒற்றுமையே பலமாம் விக்கியின் நூல் வெளியீட்டில் சம்பந்தன் அறிவுரை
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் நிச்சயம் அழிந்துவிடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
“கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் புலிகளை அழிக்க உதவினார்கள். இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றிபெற்றது. எனத்தெரிவித்த சம்பந்தன் இறுதிப்போர் நடைபெற்றபோது த.தே.கூட்டமைப்பு தலைமைகள் இந்தியாவில் தங்கியிருந்ததைப்பற்றி வாய்திறக்கவில்லை.
விடுதலைப்புலிகளை அழிக்கும்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக சர்வதேச சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சனை தீர்விற்கு முயற்சிக்கவில்லை.
தனது பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் தவற முடியாது. இந்த நாட்டின் ஆட்சிமுறை சிறுபான்மையினருக்கு உதந்ததல்ல. அதை மாற்ற வேண்டுமென மக்கள் வாக்களித்துள்ளனர்.
இவற்றை நாம் அடைவதாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒரு தூணாக நிற்க வேண்டும். தமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமாக, இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளோம். அந்த ஒற்றுமை தொடர வேண்டும். சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.
சில நாட்களின் முன்னர் நான், ஜனாதிபதி, பிரதமர் மூவரும் சந்தித்து பேசினோம். அப்போது, எங்கள் இருவரையும், மகிந்தவை சந்தித்து பேசுமாறு என்னை திரும்பி பார்த்து சொன்னார்- என்னுடைய தோல்விக்கு பாரிய காரணகர்த்தா நீங்கள் என்றார்.
“நான் அல்ல. எமது மக்கள்“ என பதிலளித்தேன். இந்த ஒற்றுமை தொடர வேண்டும். ஒற்றுமையே பலம். நாங்கள் பிரிந்தால், அழிவோம். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்“ என்றார்