அரசிடம் 2கோடி பெறவில்லையென ஒருவர் கூறமுடியுமா?-சவால் விடுகிறார் ஆனந்தன்
நடைபெற்று முடிவுற்ற வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தலா 2கோடி ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் முடிந்தால் ஒருவராவது அதனை நிராகரிக்க முடியுமா எனவும் சவால் விடுத்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்பக்காக பலகோடிகள் ஒதுக்கப்பட்டு வடகிழக்கு மக்களின் அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் வெறும்1.4 மில்லியன்கூபாய்களை அரசு காணாமல்போனோர் அலுவலகம் நிர்மானிக்க ஒதுக்கியுள்ளதாக பிரச்சாரம் செய்த த.தே.கூட்டமைப்பு அதற்கு ஆதரவழிப்பதற்கு ரணில் அரசிடம் பேரம் பேசிய செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளித்த சிவசக்த்தி ஆனந்தன் தவர்ந்த ஏனைய அனைவரும் ரூபாய் 2கோடி அபிவிருத்தி நிதியென சொல்லி அரசிடம் பெற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் அவர்கள் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளித்து அரசிடம் நிதிபெற்றது உண்மையே அதனை பெறாத சிவசக்தி ஆனந்தனே துரோகம்செய்துவிட்டார் என உரையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.