மட்டக்களப்பிலும் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் (காணொளி)
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இலங்கை
தமிழரசுக் கட்சியினருக்கு மக்கள் இன்று எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் செளந்தரநாயகத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 17 வருடங்களாக எந்த நிகழ்வையும் செய்யாத தமிழரசுக்கட்சி தேர்தல்நெருங்கிவரும் நிலையில் இதனை நடாத்துவதையும் குறிப்பாக அந்த பகுதி இளைஞர்களின் எதிர்ப்பு இருப்பதை முன்னரே அறிந்திருந்து அந்த பகுதி அமைப்புக்களுக்கு அழைப்பு வழங்கப்படாமலுமே இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாலேயே இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர் அவரது நிகழ்வு நாள் இன்றல்ல என்பதையும் இளைஞர்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் அணித்தலைவர் எஸ்.சேயோன் உரையாற்ற முயன்ற போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த தினத்தைக் கூட அறியாமல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
நிகழ்வு நிறைவுபெற்று தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் வெளியேறியபோது மீண்டும் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.