சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து நான்கு தமிழ் மாணவர்கள்

சர்வதேச ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்காக
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து நான்கு தமிழ் மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.
இலங்கையில் இருந்து ஒலிம்பியாட் போட்டிக்காக தெரிவாகியுள்ள ஒன்பது மாணவர்களில் நான்கு தமிழ் மாணவர்கள் என்ற பெருமையை யாழ் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செ.கலாபன் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த தி.கஜானி,திருகோணமலையைச் சேர்ந்த கோ.தர்சனா மற்றும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த தெ.திருக்குமார் ஆகிய நால்வருமே தமதாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இன்று சர்வதேச ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளதோடு எதிர்வரும் 3நாட்கள் போட்டிகள் தொடர்ந்து இடம்பெறுவதோடு நான்காவதுநாள் கல்விச்சுற்றிலாவிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.