Breaking News

2009ஆம் ஆண்டிற்குப் பின் தமிழர்களின் போராட்டம் குமிழி வடிவாக உள்ளதாக – குருபரன்!

2009ஆம் ஆண்டிற்குப் பின் தமிழ் மக்களினுடைய போராட்டமானது வெறும் குமிழி வடிவமாக காணப்படு வதாவும் இனிவரும் காலங்களில் எமது போராட்ட வடிவங்களை மாற்ற வேண்டுமெனவும் யாழ். பல்கலை க்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு குளப்பிட்டிச் சந்தி யில் சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலையான சுலக்சன், கஜன் ஆகியோரின் ஓராண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றியபோது மேலும்  2016ஆம் ஆண்டு சுலக்சன், கஜன் ஆகியோரைச் சுட்டுவிட்டு அதனை முதலில் விபத்து எனச் சித்தரித்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு த் தாக்கல் தொடுத்திருந்தனர்.

அதனையடுத்து, மரணவிசாரணை நடத்திய வைத்திய அதிகாரி, எமது சட்ட த்தரணி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் காரண மாகவே அது கொலையெனப் பதிவு செய்யப்பட்டு விசாரணை இழுத்தடிக்க ப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் அவரிடத்தில் சில சான்றுப் பொருட்களை நாம் கையளித்துள்ளோம் அது தொடர்பான மேலதிக அறிக்கைக்காகக் காத்திருக்கின்றோம் என கடந்த ஒரு வருடமாக காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இவ் வழக்கில் முன்னிலையாக வேண்டிய சந்தர்ப்பத்திலே நீதவானின் ஆளு கைக்குட்பட்டு அவ்வளவுதான் செய்யமுடியும் என்ற நிலையிலே பல்கலை க்கழக சமூகம் என்ன செய்யமுடியும் என்ற சுயதேடல் அவசியமாகின்றது.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது போராட்டம் ஒரு குமிழி வடிவத்திலேயே நடைபெறுகின்றது. அதாவது சம்பவங்கள் அல்லது அனியாயங்கள் நடைபெ றுகின்றபோது உடனே வெடித்துக் கிளம்பும் போராட்டம் அப்படியே நீர்த்துப் போகின்றது.

அதேபோல்தான் சுலக்சன், கஜனின் போராட்டமும் உள்ளது. எனவே சுலக்சன், கஜனின் அடுத்த வழக்குத் தவணையிலாவது பல்கலைக்கழக சமூகம் ஒன்றி ணைந்து வழக்கு நடைபெறும்போது நாம் இந்த வழக்கினை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என்பதை அரசாங்கத்துக்கு காட்டுவதோடல்லாமல்,

இவ்வழக்கு இழுத்தடிக்கப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணை க்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்றவற்றில் முறைப்பாடு செய்வ துடன், ஐநாவில் நீதிக்குப் புறம்பாக நடைபெறும்கொலைகள் தொடர்பாகவும் முறைப்பாடு செய்யமுடியுமென நிரூபித்துள்ளார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் அவர் தனது தேர்தலுக்காகவோ, சர்வதேசத்துக்கோ, தான் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தி க்கின்றேன் என்பதைக் காட்டவே இவ்வாறு நாடகமாடுகின்றார் எனவும் அவ ரிடம் சென்று முறையிடுவதால் உங்களுக்கு நியாயம் கிடைக்கப்போவ தில்லையெனவும் தனது ஆதங்க வெளிப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.