Breaking News

யுத்தத்தில் இறப்புக்கள் தவறுதலாம் 30 வருட யுத்தத்தில் குற்றமாம் – சி. தவராசா !

மிகத் திறமையான 30 வருட கால ஆயுதப் போராட்டத்தினால் எதைச் சாதித்தோம் இறுதியில் படை முகா ம்களும், விதவைகளும், காணாமல் னோரும், அங்கவீனர்களுமே மிச்சம் என வடமாகாண எதிர்க்கட்சித் தலை வர் சி.தவராசா குற்றம் சாட்டியு ள்ளார்.  யுத்தத்தில் மேலதிக இறப்பு க்கள் என்பது தவறுதலாக இடம்­ பெ­று பவையெனத்  தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 32ஆம் ஆண்டு நினைவு தினமான நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே மேற்கண்ட வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும்  தெரிவிக்கையில், போராட்ட காலத்தில் பல உயிர்களை இழந்தோம். போரில் மேலதிக இறப்புக்கள் என்பது தவறுதலாக இடம்பெறும் இறப்புக்கள் மட்டுமே. போராட்ட வரலாற்றில் கவனிக்க வேண்டியது, இப்போரினால் எதைப் பெற்றோம் என்பது மட்டுமே. 

 இவ் உலகத்தில் மிகத் திறமையான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தும் அதன் இறுதிப் பெறுபேறு என்ன? 

படைமுகாம்கள், காணாமல்போனோர், விதவைக் குடும்பங்கள், அங்க வீனர்களே மிச்சம். இந்நிலையில் இந்திய அரசினால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்ட மாகாணசபையும் பதவிப் பங்கீட்டினால் உடைந்து போயுள்ளது. 

இவையெல்லாவற்றுக்கும் காரணம் எமது தலைவர்களின் சாணக்கியமற்ற தன்மையும், இராஜதந்திரமாகச் செயற்படாமையுமேயாகும் எனக் குறிப்பி ட்டுள்ளார்.