Breaking News

எகிறிய சுமந்திரனை அடக்கினார் அருந்தவபாலன்(காணொளி)

இன்று யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தென்மராட்சி தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் அருந்தவபாலனிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கிமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அருந்தவபாலன் இணைத்தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்து நீங்கள்தான் அரசுடன் சேர்ந்து இயங்குகின்றீர்கள் எனவே சாவகச்சேரி பிரதேச சபையை இரண்டாக பிரித்து கிடைக்கின்ற அபிவிருத்திக்கான நிதியை அதிகரிக்க முடியும் எனவும் ஒரு சபையாக பெரிய ஒரு பிரதேசமாக இருப்பதால் அதனை இரண்டாக பிரித்து கிடைக்கிற நிதியை இரண்டுமடங்காக அதிகரிக்க முடியும் எனவும் கூறியபோது சபையில் பலத்த கரகோசம் எழுந்தது.

அதன்போது குறுக்கிட்ட சுமந்திரன் இதில் அரசியல் பேசவேண்டாம் என அருந்தவபாலனை மிரட்டி இதனை எச்சரிக்கையாக சொல்கிறேன் கதைக்க வேண்டாம் என மிரட்டியபோது சபையில் குழப்பம் ஏற்பட்டது.



முழுமையான காணொளி