வித்தியா கொலை வழக்கு! சிக்கலில் விஜயகலா மகேஸ்வரன்

வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர்.
அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காட்சிகள் அடங்கியிருந்தன. நீதிபதி மேற்படி காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
2015ம் ஆண்டு மே மாதம் மாணவி வித்தியா கூட்டு பாலியலின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.