முதல்வரை மாற்றுவது பற்றி ஆளுனருடன் பேச்சுவார்த்தை
முதலமைச்சரின் இன்றைய அமைச்சர்கள் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான பல்வேறு விமர்சனங்களும் மற்றும் சர்சையும் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சர் சபையில் பேசும்போது எழுந்துசென்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உட்பட மூன்று அமைச்சர்களும் ஆளுனரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி கூடி முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி 20இற்கு மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா
க தெரியவருகின்றது.
க தெரியவருகின்றது.
இதனடிப்படையில் வடமாகாண முதல்வராக சத்தியலிங்கம் வரவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சீ.வி.கே.சிவஞானம் வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதனை தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.
முதலமைச்சரை மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசப்படுவதாகவும் ஒத்துழைப்பு வழங்கினால் எத்தனை அமைச்சுக்களை அவர்களுக்கு கொடுப்பது என்பதுபற்றி ஆராயப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தொடர்புடைய செய்தி
சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு
விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)
முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்