முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்
விசாரணை அறிக்கை தொடர்பிலான விசேட அமர்வு நாளை (14) கூட்டப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் 2 அமைச்சர்களை நீக்குவதா அல்லது 4 அமைச்சர்களையும் நீக்குவதா என்ற கருத்துக்கணிப்பினை தொலைபேசிவாயிலாக முன்னர் அமச்சரவையினை மாற்றச்சொல்லி கேட்டிருந்த சகல மாகாணசபை உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தார். அத்துடன் அவர்களின் எழுத்துமூல பதிலையும் வேண்டியிருந்தார்.
மேலதிகமாக தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் நிலைப்பாட்டினையும் தனித்தனியாக கேட்டறிந்திருக்கின்றார். இதன்படி பொரும்பாலும் 4 அமைச்சர்களையும் மாற்றி தன்னை இப்பிரச்சனையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் நிலைப்பாட்டினை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் இன்று இரவு தமிழரசுக்கட்சிக்கூட்டம் கட்சியின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கிறது. அதில் தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
அமைச்சர்களான தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சத்தியலிங்கம் மற்றும் ரெலோவைச்சேர்ந்த டெனீஸ்வரன் ஆகியோர்மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்ற கொள்கையிலேயே தாம் இருப்பதாக மாவை உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சத்தியலிங்கம் மற்றும் ரெலோவைச்சேர்ந்த டெனீஸ்வரன் ஆகியோர்மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்ற கொள்கையிலேயே தாம் இருப்பதாக மாவை உறுதிபட தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் நாளை அமைச்சர்கள் விவகாரம் பற்றி எதுவும் பேசக்கூடாது என சுமந்திரன் தரப்பு குழப்பவாதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விவாதங்கள் எதுவும் செய்வதில்லை என்றும் முடிவை முதல்வரிடம் விட்டுவிடுவது என்றும் முடிவு எட்டப்பட்டிருக்கின்றது. அதனால் நாளைய அமர்வு வெறுமனே தன்னிலை விளக்கங்களோடு முடிவடைய உள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை தமிழரசுக்கட்சியின் முடிவுகளோடு ஒத்துப்போகாத நிலைவரின் முதல்வருக்கு எதிராக செய்ற்படுவது குறித்தும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் காய்நகர்த்தி வருவதாகவும் அறிய முடிகின்றது.
அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களை நீக்கச்செய்வதற்காக அவர் பற்றி ஒரு தவறான தகவலை ஏற்கனவே கோபத்தில் உள்ள முதல்வரிடம் எட்டச்செய்வதற்கான பணிகளும் அதனை எதிர்ப்தற்கான பணிகளும் ஒரே தருணத்தில் சில தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அதன்மூலம் முதல்வரை குழப்பும் முயற்சிகள் அரங்கேற்றப்படுகின்றது. அதன்படி சத்தியலிங்கம் அவர்கள் சனாதிபதியிடம் முதல்வருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் முதல்வரையும் அவைத்தலைவரையும் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின் மூலம் பதவியிறக்கி மாற்றங்கள் ஏற்படுத்தவும் வேறு ஒரு முயற்சியிலும் ஒருதரப்பு ஈடுபட்டுவருவதாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முதல்வர் முழு அமைச்சரவையினையும் கலைத்து விட்டு ஒவ்வொரு கட்சிக்கும் அமைச்சுப்பதவிகளை பகிர்ந்து கொடுக்க உள்ளதாக கூட கதை பரப்பப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மற்றக்கட்சிகளுடன் பேச்சு நடாத்திய முதல்வர் தமிழரசுக்கட்சியுடன் பேசாதமை ஏன் என்ற கேள்வி சம்பந்தருக்கு தெரியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தர் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு தொலைபேசியில் அழைத்து இதுபற்றி வினாவியிருக்கின்றார். அதன்பின் விக்கினேஸ்வரன் மாவையுடன் தொடர்புகொண்டு பேசிய வேளை அறிக்கையின் படி 2 அமைச்சர்களை வேண்டுமாயின் நீக்குங்கள் ஆனால் 4 ஆமைச்சர்களையும் மாற்றுவீர்களாக இருந்தால் உங்களை கூண்டோடு கலைப்பதற்கான வேலைகளை முன்னெடுக்கவேண்டிவரும் என உறுதிபடதெரிவித்திருக்கிறார் என முதலமைச்சர் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சரின் செயலாளர் நியமனம் இழுபறிகாரணமாக முதலமைச்சர் மிகுந்த தலையிடியில் உள்ள நிலையில் இந்த விசாரணை அறிக்கை தலையிடியும் சேர்ந்து மிகப்பெரிய தலையிடியாக முதலமைச்சர் முன் உள்ளதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே அமைச்சர்களிடம் இருந்து தன்னிலை விளக்கங்களை பெற்றுள்ள முதலமைச்சர் நாளை என்ன செய்வார்? மாகாணசபை குழப்பகரமானதாக அமையுமா நம்பிக்கையில்லா தீர்மானம் எதவும் கொண்டுவரப்படுமா ? நாளை அமர்வுக்கு முன்னாக நடைபெற உள்ள அமைவத்தலைவருடனான முன்னாயத்த கூட்டத்தில் இருந்துதான் தெரியவரும்.
எது எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலையில் அமைச்சர்களின் பதில்களை தீர ஆராய்ந்த பின்னரே முதலமைச்சர் தீர்க்கமான முடிவுகளை எடுப்பார் எனத்தெரியவருகின்றது.
தொடர்புடைய முன்னைய செய்தி.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்