கையொப்பமிட்ட 7முட்டாள்கள் முடிவை மாற்றினர்-வவுனியாவில் பரபரப்பு(காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் அங்கத்துவம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சி (ஈபிஆர்எல்எப்) மாத்திரம் இதில் உடன்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை சுமந்திரனால் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வகுப்புகள் நடாத்தப்பட்டது வகுப்புக்களின் முடிவில் முன்னர் ஜெனீவாக்கு மகஜர் அனுப்பிய சுமந்திரனால் முட்டாள்கள் என அழைக்கப்படும் 11பாராளுமன்ற உறுப்பினர்களில் 7பேர் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டதாக சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று கூட்டம் முடிவடைந்தபின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சின்னக்கதிர்காமர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம் நடைபெற்றது.
இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும், இலங்கை சம்மந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்ற சூழ்நிலையில் ஒரு உத்தியோகபூர்வமான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்ற நிலைமையில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலைமையை எடுத்துச் சொல்வதற்காக நாள் முழுவதும் நாங்கள் கருத்து பரிமாறல்கள் செய்தோம்.
இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இப்போது வாசிக்கின்றேன். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்.ஆர்.சி 30 - 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை வழிடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயலாளர் நடேசு சிவசக்தி ஆனந்தன் இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்தார். அதையும் நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதன்போது குறித்த ஊடக சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவைசேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதேவேளை, ஜெனீவா விவகாரம் தொடர்பில் நீண்ட நேரமாக பேசப்பட்டு பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முன்னைய செய்தி
சுமந்திரன் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்