வவுனியா கூவத்தூர் விடுதி கூட்டத்தின்பின் உறுப்பினருக்கு ஏற்பட்ட டவுட்
பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை சுமந்திரனால் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் வகுப்புகள் நடாத்தப்பட்டது வகுப்புக்களின் முடிவில் முன்னர் ஜெனீவாக்கு மகஜர் அனுப்பிய சுமந்திரனால் முட்டாள்கள் என அழைக்கப்படும் 9பாராளுமன்ற உறுப்பினர்களில் 7பேர் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டதாக சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.
கூட்டம் முடிவடைந்து வடமராட்சிக்கு தனது இல்லத்திற்கு வந்த வடமாகாணசபை உறுப்பினருக்கு திடீரென ஒரு டவுட்(சந்தேகம்) தோன்றியுள்ளது. இந்த கூட்டத்தின்போதும் தற்போதைய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் மக்களுக்கு பரவலாக எழுந்துள்ள சர்ச்சை மற்றும் எதிர்ப்புக்களையடுத்து உண்மையாக தான் சிந்தித்து பார்த்ததாகவும் அதன்படி தனக்கு ஒரு டவுட் தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது குறைகூறுபவர்கள் உண்மையாகவே கூட்டமைப்புக்கு வாக்களித்தவர்களா என்ற ஐயம் எழுந்துள்ளதாக தனது குருவான சின்னக்கதிர்காமர் கேட்டதாகவும் அதன்பின்னரே தனக்கு இதுபற்றி கேள்வி எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு இது குறித்து தனக்கும் தெளிவில்லை என்பதை ஒப்புக்கொண்டு யாராவது தெளிவானவர்களை தனது முகநூல் பக்கத்திற்கு வந்து விளக்கமளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதோடு கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள்தான் குறை கூறுகின்றார்களா அல்லது கஜேந்திரகுமாருக்கு வாக்களித்தவர்களா அல்லது பொழுதுபோகாமல் அலுட்டுகின்றார்களா என்பதே தனது ஐயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்
கையொப்பமிட்ட 7முட்டாள்கள் முடிவை மாற்றினர்-வவுனியாவில் பரபரப்பு(காணொளி)
சுமந்திரன் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
கையொப்பமிட்ட 7முட்டாள்கள் முடிவை மாற்றினர்-வவுனியாவில் பரபரப்பு(காணொளி)
சுமந்திரன் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்