எழுக தமிழை குழப்ப அன்றைய நாளை பாடசாலை நாளாக அறிவிப்பு
தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு (தேசிய பாடசாலைகள் தவிர) எதிர்வரும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் EP/3/1/AO/01 எனும் இலக்க விசேட கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுடள்ளது.
இதன் முதற்கட்டமாக எதிர்ப்புகள் எழும் என்பதை கருத்திற்கொண்டு தமிழரசு கட்சியின் வடமாகாண கல்வி அமைச்சரால் வடக்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டு
இன்று கிழக்கிலும் தமிழரசுகட்சி திருகோணமலை மாவட்ட தலைவரும் கல்வி அமைச்சருமான தண்டாயுதபாணியால் அமுலுக்கு வரும்முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுக தமிழில் கல்விச் சமூகம் கலந்துகொள்வதை தடுப்பதற்கு தமிழரசுக்கட்சி கடுமையாக பாடுபட்டுவருவதை ஏற்பாட்டாளர்கள் கடும விசனத்துடன் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய முன்னைய செய்தி
எழுக தமிழை குழுப்ப சம்பந்தன் தலைமையில் மாட்டுப்பொங்கல்
மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள் அணி திரள்வதை குறைக்கும் நோக்குடனும் அந்த நிகழ்விற்கு இரு நாட்கள் முன்னதாக ஒரு நிகழ்வை பொங்கல் என்றபோர்வையில் மக்களை ஊர்வலமாக்க ஏற்பாடு நடைபெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுக தமிழ் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னர் ஓர் ஊர்வலத்தினை நடாத்தி தமிழ்மக்களின் தேவை மற்றும் அரசியல்விடயங்கள் சம்பந்தமாக தாம் மிகவும் சாதுரியமாக செயற்படுவதாகவும் சர்வதேச நாடுகளின் அனுசரணையோடு எல்லா விடயங்களையும் தாம் கையாள்வதாக மக்களுக்கு வழமையான அரசியல் உரையூடாக சொல்வதன் மூலம் அவர்களை நம்பவைத்து அடுத்தடுத்த தினங்களில் மக்கள் அணிதிரள்வதை குறைப்பதே இவர்களின் திட்டமெனவும் இதனால் அங்குள்ள இளைஞர்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அந்த பணிகளை முன்னெடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தமிழரசுக்கட்சியின் முக்கிய தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரும் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் எழுக தமிழை குழப்புவதற்கு கடுமையாக உழைத்த உதயன் நிர்வாக இயக்குனரும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவனுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாண எழுக தமிழை குழப்புவதற்காக பத்திரிகை வாயிலாக பல பொய்யான செய்திகளை பரப்பியதோடு துளை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி மூலமாக அதே தினத்தில் ஒரு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதும் அதனை ஏற்பாட்டாளர்கள் சாதுரியமாக கையாண்டு அவர்களை வேறிடத்தில் செய்யுமாறு அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னைய நாட்களில் வர்த்தகர் சங்கம் ஆதரவில்லை என்ற படுமோசமான பொய்யினையும் எழுக தமிழ் நிகழ்விற்கு பொலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தியும் பின்னர் எழுக தமிழ் அன்று இன்று புரட்டாதிச் சனி இன்று எள்ளெண்ணை எரிக்காவிட்டால் 5வாரங்கள் காத்திரிக்கவேண்டும் என்று தலைப்பு செய்தியையும் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியிருந்த சரவணபவன் தனது மகளின் பிறந்தநாளை மைத்திரியை அழைத்து வீட்டில் கொண்டாடும் அளவிற்கு அரச செல்வாக்குடையவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி |
எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி |
உண்மையான செய்தி வேறு பத்திரிகையில் |
தொடர்புடைய முன்னைய செய்தி
சம்பந்தன் ஐயாவின் கொடும்பாவியை யாரும் எரிக்கக்கூடாது (காணொளி)
முன்னைய செய்தி
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்
முன்னைய செய்தி
முன்னாள் போராளி கொலை செய்தே தூக்கிலிடப்படார்-பரபரப்பு வாக்குமூலம்
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்