புலிகளின் இனவழிப்பு நிகழ்வு- சம்பந்தன்,சுமந்திரன் தலைமையில் (காணொளி)
தொடர்பில் இன்று கொழும்பில் முஸ்லீம் சமூகத்தினரால் ஒழுங்குசெய்யப்பட்ட புலிகள் இனவழிப்பு செய்தார்கள் என்றும் அதன் நினைவுநாள் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் பங்குபற்றலோடு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சம்பந்தன் தனது வழமையான புலியெதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு புலிகள் யாழிலிருந்து முஸ்லீம்களை மட்டும் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தமிழ் மக்களையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்கள் என்று தனது பிரசங்கத்தை ஆற்றியிருந்ததோடு தீர்வு விடயத்தில் முஸ்லீம்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதில் கலந்துகொண்ட சுமந்திரன் அவர்கள் தனதுரையில் வடமாகாண முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் வடமாகாண முதல்வல் தடைபோட்டுவருவதாக குற்றம் சாட்டியுள்ளதோடு தன்னால் வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களுக்கு சில முஸ்லிம் தலைவர்கள் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் அவருக்கு அவ்வாறு யாரும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வடமாகாணத்தில் (வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளில்) சிறப்புடன் பணியாற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய முன்னைய செய்தி
புலிகள் இனவழிப்பு செய்தனராம் கொழும்பில் விழா எடுக்கிறார் சம்பந்தன்(ஆதாரம்)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்