Breaking News

வாகன கொள்வனவு மோசடியில் நான்கு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள்(ஆதாரம்)

தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான
பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இந்தக் கொள்வனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மூவரில் அதன் தலைவருமான மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன்,சிவமோகன் உடன் புளட் தலைவர் சித்தார்த்தன், அவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தக்காரருமான வர்த்தகர் ஒருவர் 1750ரூபா மட்டும் வரியாகச் செலுத்தி சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டிருந்தது.

அரசாங்கத்தின் வரிக்கொள்கையை மீறி வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதால் ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் ரூபா இழக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி கொடித்துவக்கு கருத்துத் தெரிவிக்கையில், தீர்வை வரியின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்படும் அனுமதியில் இடம்பெறும் வரி மோசடிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென தான் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் முறைப்படி இவற்றை மேற்கொள்வதால் அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற வருமான இழப்புத் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தலையீடு செய்யமுடியாது என அவர் தனக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், ஊழல் சட்டத்தின் நான்காவது பிரிவின்கீழ் நம்பகரமானதும், முறையானதுமான விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அதிகாரமிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி, தமது பெயரில் வாகனங்களைக் கொள்வனவு செய்து அவற்றை விற்பனை செய்வது ஊழல் சடத்தின் 70ஆவது பிரிவில் இது ஒரு பாரிய குற்றமெனவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு விற்பனை செய்வதாயின் முழுமையான வரி செலுத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலுமொரு முகநூல் பதிவு


•வோட்டு போட்ட மக்களோ பட்டினியில்- ஆனால்
பாராளுமன்ற உறுப்பினர்களோ சொகுசு வண்டியில்.

தீர்வை வரியின்றி கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

இந்த சொகுசு வாகன இறக்குமதியால் அரசுக்கு 40 பில்லியன் ரூபா இழப்பு வருடமொன்று ஏற்படுகிறது.

இதில் 4 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களின் விபரம் வருமாறு,

•மாவை சேனாதிராஜா- 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண் குறூசர் சொகுசு வாகனம்.

•சிறீதரன் - 5 கோடி ரூபா பெறுமதியான கம்மர் சொகுசு வாகனம்

•சித்தாத்தன் - 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா குறூசர் சொகுசு வாகனம்

•சிவமோகன் - 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண்ட் குறூசர் சொகுசு வாகனம்.

ஏற்கனவே சரவணபவன் எம்.பி எட்டுக் கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை வெறும் 1250 ரூபா வரி மட்டுமே கட்டி, வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்தவாரம் கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் 17 கள்ளுப் போத்தல்களுடன் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.

கல்வி கற்ற வேண்டிய சிறுவன் கள்ளு விற்கிறான் என்ற கவலை கொஞ்சம்கூட இன்றி கிளிநொச்சி எம்.பி 4 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்.

என்ன கொடுமை இது?

ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள். ஆனால் தீர்வை வரியற்ற சொகுசு வண்டிகள்தானே வருகிறது. ஒருவேளை நாம்தான் பிழையாக விளங்கிவிட்டோமோ?




முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்