மூன் கூட்டமைப்பு சந்திப்பு - வெளியே மக்கள் கூட்டம்(படங்கள்)
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்..
யாழ்ப்பாணத்தில் முத்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், முதலாவதாக யாழ். ஆளுநர் அலுவலகத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்தார். அங்கு, பான் கீ மூனுக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வடக்கு ஆளுநர் மற்றும் அதிகாரிகள் தரப்பிற்கும் பான் கீ மூனுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்று தற்போது கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பாங்கிமூனிற்குமிடையிலான சந்திப்பு யாழ் நூலகத்தில் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பாங்கிமூனை சந்திப்பதற்காக பெருமளவான காணாமல்போன உறவுகளும் பொதுமக்களுமென நூலகத்திற்கு முன்னால் கூடியுள்ளர். இவ்வாறாக கச்சேரி, ஆளுனர் அலுவலகம்,நூலகம் என மூனைத்தேடி மக்கள் படையெடுக்கின்றபோதும் அவரை மக்கள் சந்திப்பதற்கான வாய்ப்பினை தமிழ்த்தலைவர்கள் ஏற்படுத்தி கொடுப்பார்களா என்பது கேள்வியே.
ஆளுனர் அலுவலகத்தில் |
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்