அமைச்சர்களின் ஊழலை விசாரிக்க குழு! வடக்கு முதல்வர் அதிரடி!(காணொளி)
வடமாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் வருவதனால் அது தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வட மாகாணசபையின் அனுமதியை வடக்கு முதலமைச்சர் கோரியுள்ளார்.
எதிர்வரும் 58 ஆவது அமர்வில் இது தொடர்பாக அனுமதி கோரி பிரேரணையை வடக்கு முதல்வர் முன்வைக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.
இளைப்பாறிய இரு நீதிபதிகள் மற்றும் இளைப்பாறிய இரு அரச அதிபர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவை தான் நியமித்திருப்பதாகவும் அவர்கள் அது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்றும் அது தொடர்பிலான பிரேரணையினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபைக்கு கொண்டுவரப்போவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் அமர்வின்போது இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.