விக்கினேஸ்வரன் ஐ.நா செயலரை சந்திக்ககூடாது- சம்பந்தன் விடாப்பிடி
பான் கீ மூன், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பினை நடத்தவுள்ள நிலையில், அந்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனையும் இணைப்பதனூடாக விக்கினேஸ்வரனுடனான தனிப்பட்ட சந்திப்பை தவிர்ப்பதற்கும் சொல்லப்படவிருக்கும் உண்மைகளை மூடி மறைப்பதற்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து அறிய வருகின்றது.
யாழ்வரும் ஐ.நா செயலாளர் முதலமைச்சரை சந்தித்தால் தற்போதைய நிலவரங்களை முதலமைச்சர் வழமைபோல நிலஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல்,இராணுவத் தலையீடு,மைத்தியின் நெருக்குவாரங்கள் உள்ளிட்ட விடயங்களை போட்டுடைத்துவிட்டால் அது தற்போதைய மைத்திரி ரணிலுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதால் இயலுமானவரை ஐ.நா செயலரின் நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சரின் சந்திப்பை நிறுத்துவதற்கான உயர்மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்கிங்டொத்தின் ராஜதந்திர செய்தியாளர் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை விளங்கிக்கொண்ட முதலமைச்சரும் கொழும்பு சந்திப்பை தவிர்ப்பார் என்றே அறிய முடிகின்றது, கொழும்பு சந்திப்பை தவிர்ப்பதன் ஊடாக யாழ்வரும் ஐ.நா செயலரை சந்திக்கும் ஏற்பாட்டை வேறு வழிகளில் முதலமைச்சர் பெற்றுக்கொள்ளுவார் என்றும் நம்பப்படுகின்றது.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சந்திப்பில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும், செல்வதாக முடிவு எடுக்கவில்லை என்றும் சந்திப்பது பற்றி சிந்திப்போம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின்போது, வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், நலன்புரி முகாம்களை சென்று பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்