Breaking News

முன்னாள் போராளிகளை அமெரிக்க மருத்துவர்குழு பரிசோதிக்கும் -முதலமைச்சர்

யாழ். குடாநாட்டுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும்
அமெரிக்க விமா னப்படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் 
போராளிகளை பரிசோதனைக்கு உட்டபடுத்தலாம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த கோரிக்கையினை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதுதொடர்பிலும் தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 58ஆம் அமர்வு யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இதன்போதே மேற்படி கருத்தை முதலமைச்சர் உறுதிப்படுத்தியதாக தமிழ்கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


இதன்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பன்னாட்டு மருத்துவர்களை கேட்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சபையில் கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மருத்துவ உதவி பொருட்களுடன் வந்த அமெரிக்க விமான படையினருடன் யாழ்.வந்தபோது அமெரிக்காவின் ஸ்ரீலங்காவிற்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை தாம் கேட்டதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என கூறினார்.

தொடர்புடைய முன்னைய செய்தி