Breaking News

உதயனுக்கு ஆப்பு வைத்தார் வித்தியாதரன்(காணொளி)

விடுதலைப்போராட்டத்தின் முக்கியமான
காலப்பகுதியில் காத்திரமான பங்களிப்பினை ஆற்றிவந்த உதயன் பத்திரிகை ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் உதயன் பத்திரிகையை சார்ந்த சரவணபவன் தமிழரசு கட்சியை சார்ந்து தேர்தலில் நிற்கின்றார் என்பதை அறிந்த அன்று மாலையே தான் உதயன் பத்திரிகையிலிருந்து விலகியிருந்ததாக குறிப்பிட்டார்.


உதயன் பத்திரிகை என்பது எந்த ஒருவருக்கும் சார்ந்தது அல்லது அது மக்களின் சொத்து என்றும் அது எந்த நேரத்திலும் ஒரு தனிமனிதரும் உரிமை கோரமுடியாது என்றும் பின்னர் உதயன் பத்திரிகை கட்சி சார்ந்து இயங்குவதை தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அத்தோடு யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் சரியான பணியினை செய்யாத காரணத்தாலும் தான் புதிதாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்போவதாகவும் முன்னாள் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான நா.வித்தியாதரன் அவர்கள் அவுஸ்ரேலிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய பேட்டி உங்கள் பார்வைக்காக.




தமிழரசுக்கட்சியின் இணக்க அரசியல் நகர்வுகளை தமிழ்மக்களுக்கு சென்றடையாமல் பலமூடுமறைப்புக்களை செய்துவந்த உதயன் பத்திரிகைக்கு வித்தியாதரனால் ஆரம்பிக்கப்படவுள்ள காலைக்கதிர் பத்தரிகை எத்தகைய தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வழமைபோல இதுவும் ரணிலின் வழமையான காய் நகர்த்தலா என்ற கேள்வியும் ஊடகப்பரப்பில் உலாவருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்