Breaking News

முதல்வரிற்கு ஆதரவாக 23பேரும் எதிராக 17பேரும்-இறுதி முயற்சியும் தோல்வி

வட மாகாணத்திற்கான பொருளாதார
மத்திய நிலையம் ஓமந்தையிலா? அல்லது தாண்டிக்குளத்திலா? அமை ப்பதென கடுமையான சர்ச்சைகள் உருவாகியிருந்த நிலையின் அதன் முடிவுக்காக சம்பந்தனால் வாக்களி ப்பு முடிவு என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வாக்களிப்பு படிவங்கள் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் தெரிவான ஓமந்தையில் பொருளாதார வர்த்தக மையம் அமைவதற்கான தெரிவில் 23 பேர்வரை முதல்வருக்கு ஆதரவாகவும்,


இல்லை தாண்டிக்குளத்திலேயே அமையவேண்டுமென வலியுறுத்திவந்த றிசாட் பதியுதீன் தெரிவுக்காக 17பேரும் தமது நிலைப்பாடுகளை தெரியப்படுத்தியிருப்பதாக அறியவருகின்றது.

இருப்பினும் சில உறுப்பினர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் இருப்பதனால்  அவர்களின் தொலைபேசிவாயிலான உத்தரவாதப்படியும் நேரடியாக கிடைத்த வாக்களிப்பின்படியுமே மேற்படி முடிவுகள் வந்திருப்பதாக தமிழ்கிங்டொத்தின் வடமாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதுவரை கடிதங்களை அனுப்பாத 7நபர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு கேட்டபோது அவர்களில் ஐந்துபேர் ஓமந்தை என்றும் இருவர் தாண்டிக்குளம் என்ற முடிவிலும் உள்ளதாக அறியவந்துள்ளது. இருப்பினும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு அனைவரது கடிதங்களும் கிடைத்தபின்னரே அறியத்தரப்படும் எனக் கூறப்படுகின்றது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி முதலமைச்சருக்கு ஆதரவாக பாராளு மன்ற உறுப்பினர்களான சிறீதரன்,சிவசக்தி ஆனந்தன்,சித்தார்த்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட 19மாகாணசபை உறுப்பினர்கள் ஆதரவை வழங்கவுள்ளதாக அறியவருகின்றது.

முதலமைச்சரின் முடிவுக்கு எதிரான தரப்பில் தாண்டிக்குளத்தில் அமைய வேண்டுமென மாவை.சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கல நாதன்,சாந்தி, சரவணபவன், சிவமோகன்,மற்றும் மாகாணசபை உறுப்பி னர்களான சிவஞானம், சுகிர்தன், சஜந்தன், ஆர்னோல்ட்,அஸ்மின், பரம்சோதி, சிராய்வாய்,டெனிஸ்வரன், சத்தியலிங்கம், கமலேஸ்வரன்,மயூரன் ஆகி யோரும் இருப்பதாக அறியவருகின்றது.

இதுதொடர்பில் முதல்வரின் கை ஓங்குவதை அவதானித்த சம்பந்தர் தரப்பு உடனடியாக மாவையை முதலமைச்சரை சந்திக்க வைத்து மீண்டும் முதல்வரை பணியவைக்கும் செயலில் இறங்கியிருந்தது இருந்தபோதும் முதல்வர் நேற்று இரவுவரை தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சந்திப்பின்பின்னர் மாவை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.