ரவிகரன் ''பைத்தியகாரன்'' -கட்சிதாவிய சிவமோகன் எம்.பி நேர்காணல் இணைப்பு
அண்மையில் புதுக்குடியிருப்பில்
இடம்பெற்ற கலைவிழாவிற்கு 3இலட்சம் ரூபாசெலவில் 30பஸ்களில் 3ஆயிரம் மக்களை கொண்டுவந்திருந்ததாகவும் அது போல வடமாகாணசபையில் ஒழுங்கு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு ஏன் மக்களை ஒழுங்கு செய்யமுடியவில்லை என்றும் உங்களால்(வடமாகாணசபையால்) முடியாவிட்டால் என்னிடம் தாருங்கள் நாம் செய்து காட்டுகின்றோம் என்றும் சவால் விட்டுள்ளார்.
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஒரு பைத்தியகாரன் என்றும் அவரே முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஒழுங்குகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்றும் அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியிலிருந்து தமிழரசுகட்சிக்கு கட்சிதாவிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவமோகன் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவிலிருந்து இயங்கும் ஒரு இணையத்தளத்திற்கு அவருக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார் இருந்தும் அந்த நேர்காணல் சில மேல்மட்ட அழுத்தங்களின் பின்னர் அந்த நேர்காணலும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.